சினிமாக்காரர்களின் இன உணர்வு, நாட்டுப் பற்று குறித்த பேச்சுக்கள் எல்லாமே வெட்டித்தனமானவை, வெறும் பேச்சுக்கள் என்பதற்கு இதோ ஒரு சிறந்த உதாரணம்...
இலங்கைக்குப் போய் ராஜபக்சேவின் விருந்தாளியாகவும் இலங்கை அரசின் பிஆர்ஓவாகவும் செயல்பட்ட அசின், அத்தோடு நில்லாமல் தனக்கு எதிராக கருத்து கூறிய அனைவரையும் ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்கு விமர்சித்தார். கூடவே விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களை இலங்கை அரசின் சார்பில் இலங்கைக்கு வரவழைக்கவும் முயன்றார்.
இலங்கையில் படப்பிடிப்புக்கு இந்திய நடிகர்கள் யாரும் போகக் கூடாது. அப்படிப் போனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என தென்னிந்திய சினிமா கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அசின்.
இவருக்கு நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி கண்டனம் தெரிவிக்க, தலைவர் சரத்குமாரோ தாங்கு தாங்கென்று தாங்கி ஆதரவு தந்தார். அங்கேயே அசின் எதிர்ப்பு பிசுபிசுத்துப் போனது.
அதுவரை, மீண்டும் சென்னைக்குப் போகவே பயமாக உள்ளது என்று இலங்கை பத்திரிகையாளர்களிடம் கூறிவந்த அசின், இப்போது படு பந்தாவாக மீண்டும் விஜய்யுடன் காவல் காதல் படத்தில் நடிக்க வந்துவிட்டார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்களன்று இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. எந்த எதிர்ப்போ, பிரச்சினையோ இல்லாமல் ஜம்மென்று மெய்க்காப்பாளர்கள் சூழ வந்த அசினை வரவேற்றனர் படக்குழுவினரும், ஹீரோ விஜய்யும்.
இவருக்கு தமிழக போலீசார் கூடுதல் பாதுகாப்பு வேறு கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், ரெடி படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கு இலங்கை போகும்போது கூடவே ஒரு தமிழ் ஹீரோவையும் அழைத்து வருவதாக இலங்கை தமிழர்களுக்கு வாக்களித்துள்ளாராம் அசின்.
அசின் வலையில் மாட்டப் போவது யாரோ!
Wednesday, August 11, 2010
Wednesday, August 4, 2010
tamil inception | ஏழாம் அறிவு
முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக தமிழில் நடிக்கிறார்.
இந்தப் படம் முற்றிலும் புதிய கதை என்று கூறப்பட்டாலும், கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஸனின் தழுவல் என்று தெரிய வந்துள்ளது. இதே இயக்குநரின் மொமெண்டோவைத்தான் கஜினியாக எடுத்து வெற்றி கண்டது சூர்யா - முருகதாஸ் கூட்டணி .
இந் நிலையில், படத்தில் சூர்யாவின் பாத்திரம் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது. கதைப்படி சர்க்கஸ் கம்பெனியில் பணியாற்றும் சாகஸக் கலைஞராக நடிக்கிறாராம் சூர்யா. இதற்காக கோவையில் இப்போது நடக்கும் கிரேட் பாம்பே சர்க்கஸ் கூடாரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழில் காணாத அசத்தல் சாகஸங்களை இந்தப் படத்தில் செய்யவிருக்கிறாராம் சூர்யா.

Subscribe to:
Posts (Atom)