Monday, April 26, 2010

அஜித்தின் அடுத்த படம், இளம் இயக்குனர் ?


ஐரோப்பாவில் கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அ‌‌ஜீத் திடீரென்று இளம் இயக்குனர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‌ஜி உங்க டைர‌க்சனில் நடிக்கணும். ஸ்கி‌‌ரிப்ட் ரெடி பண்ணுங்க. ஒரே வ‌ரியில் விருப்பத்தை கூறியிருக்கிறார் அ‌‌ஜீத். அந்த இயக்குனர், பொல்லாதவனை இயக்கிய வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை முடித்திருக்கும் வெற்றிமாறன் அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். அ‌‌ஜீத்தே நேரடியாகப் பேசியதால் சிம்பு படத்தை அவர் தள்ளி வைத்தாலும் ஆச்ச‌ரியமில்லை என்கிறார்கள்.

Saturday, April 17, 2010

race race ajith..


கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் கால்ஷீட்டுக்கு தவமிருக்கிறார்கள். படத்துக்கு ரூ 10 கோடிக்கும் மேல் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் அஜீத் ஒரு முடிவெடுத்துவிட்டு கார் ரேஸுக்கு கிளம்பிவிட்டார். இப்போது இங்கிலாந்தில் நடக்கும் பார்முலா 2 பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜீத், இதுவரை நடந்த அனைத்து பயிற்சி ஓட்டங்களிலும் கடைசியாகவே வந்துள்ளார்.

நேற்று நடந்த பிராக்டீஸ் 1-ல் 21 வது இடத்திலும், இரண்டாவது பயிற்சி ரேஸில் 22வது இடத்திலும் வந்துள்ளார். இன்று காலை நடந்த பந்தயத்தில் 23 வது இடத்தைப் பிடித்துள்ளார் அஜீத். இதில் அவர் 7 லாப்ஸ்கள் மட்டுமே ஓட்டியுள்ளார்.

குறிப்பாக இன்றைய போட்டியில் அவரது கார் ரேஸ் ட்ராக்கை விட்டு வெளியேறி மண்ணுக்குள் புதைந்துவிட்டது.

சில தினங்களுக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகளிலும் அஜீத்தின் 28வது எண் கொண்ட வாகனம் கடைசி இடத்திலேயே வந்தது. ஒரு போட்டியில் அஜீத்தின் காரை ஓவர் டேக் செய்த சக போட்டியாளர், அஜீத்தை இரண்டாவது முறை தாண்டிச் சென்றதைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் இன்று ஒரிஜினல் போட்டி துவங்குகிறது. இந்தப் போட்டியில் அஜீத் முதல் ஐந்து இடங்களுள் ஒன்றைப் பிடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தப் போட்டிகளில் ஜெயித்தால் அவர் அடுத்து மொராக்கோவில் நடக்கும் எப்2 ரேஸிலும் பங்கேற்பார்.

இந்தப் போட்டிகளெல்லாம் முடிந்த பிறகுதான் தனது 50 வது படத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அஜீத். இந்தப் படத்தை அழகிரி மகன் தயாநிதி தயாரிக்கிறார், கவுதம் மேனன் இயக்குகிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...