Friday, June 4, 2010

ஐய்யய்யோ.. ஐ.ஐ.எப்.எ நான் போகலை! - அலறும் ஜெனிலியா

நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான் ஒருபோதும் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்", என்றார் நடிகை ஜெனிலியா.

இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் யாரும் போகவில்லை. தமிழரின் ரத்தக் கறை படிந்த இலங்கையில், அந்த படுகொலைகளை மறைக்க ராஜபக்சே செய்யும் திருகுதாள வேலை இது என்று தமிழ் உணர்வாளர்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டு இவர்கள் அனைவரும் விழாவைப் புறக்கணித்தனர், யாரும் சொல்லும் முன்பே ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் தங்கள் புறக்கணிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று கொழும்பில் தொடங்கிய ஐஃபா விழாவுக்கு சில இரண்டாம் நிலை பாலிவுட் நடிகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் நடிகை ஜெனிலியாவும் கலந்து கொண்டதாக சிங்கள பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்தி தமிழ் ஊடகங்களிலும் வெளியானது. இதனால் அவருக்கு தென்னகத்தில் ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டது.

இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனார் ஜெனிலியா. "ஐயோ...நான் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை. உண்மையில் நான் சாயிஃப் அலிகான் மற்றும் ஷாரூக்கானுடன் மேடையில் நடனம் ஆடுவதாக இருந்தது. மனீஷ் மல்ஹோத்ராவுடன் ரேம்ப் வாக் பண்ணவும் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழர் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்த்த பிறகு நான் வி்லகிக் கொண்டேன்.

நான் தமிழில் அறிமுகமானவள். தமிழ் சினிமாவை நேசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ஆசை உள்ளது. இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். தனுஷுடன் உத்தம புத்திரன் படத்தில் நடிக்கிறேன்.." என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...